அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் ஆதரவளிப்பதாக உறுதி

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் ஆதரவளிப்பதாக உறுதி

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கப்படும் என அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் உறுதியளித்துள்ளன. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சி வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரது நடவடிக்கை, அத்துமீறலாகவே கருத வேண்டியுள்ளது என அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

இலங்கை தொடர்பிலான நவனீதம்பிள்ளையின் அறிக்கையானது சாதகத்தை விடவும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்நாட்டு நல்லிணக்க முனைப்புக்களை, ஆணையாளர் கவனத்திற்கொள்ளத் தவறியுள்ளதாக்க குற்றம் சுமத்தியுள்ளது.

பெலாரஸ், ரஸ்யா, சீனா, பாகிஸ்தான், கென்யா, தாய்லாந்து, எகிப்து, கியூபா, மியன்மார், சூடான், உகண்டா, வெனிசுலா, சிம்பாப்வே உள்ளிட்ட 14 நாடுகள் இவ்வாறு இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனைக்கு 32 நாடுகள் ஆதரவு

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனைக்கு 32 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கனடா, நோர்வே, மெக்சிகோ, போலாந்து, ஒஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், எஸ்டோனியா, பின்லாந்து, ஜோர்ஜியா, ஜெர்மனி, கிறீஸ், ஹங்கேரி, மொனாகோ, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லெச்டென்ஸ்டீன், லித்துவேனியா, மோல்டாவா, மெண்டிநிக்ரோ, ருமேனியா, ஸ்லோவோக்கியா, சோவேனியா, போத்துக்கல், ஸ்பெயின், சுவிடன், சுவிஸர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகள் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேவேளை நேற்று காலை நடைபெற்ற கூட்டத்தின் போது அணிசேரா நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. இதனிடையே யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்த விசேட விசாரணைக்குழுவொன்று இலங்கைக்கு செல்ல வேண்டும் என்ற வார்த்தையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.