மாலி நாட்டில் இயங்கி வரும் அல் கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2011ம் ஆண்டு மாலி நாட்டின் ஹாம்போரி நகர் ஓட்டலில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகளை கடத்திச் சென்றனர்.அவர்களை பிரெஞ்சு உளவாளிகள் என கருதிய தீவிரவாதிகள், தனியறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி அவர்களில் ஒருவரான பிலிப் வெர்டான் என்பவரின் தலையை வெட்டிக்கொன்று விட்டதாக வட ஆப்பிரிக்க அல் கொய்தா இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
