லண்டனில் மூன்றுதமிழ் இளைஞர்கள்தொடர்ந்து உண்ணாவிரதம்

லண்டனில் மூன்றுதமிழ் இளைஞர்கள்தொடர்ந்து உண்ணாவிரதம்

லண்டனில் மூன்றுதமிழ் இளைஞர்கள்தொடர்ந்து உண்ணாவிரதம்

ஈழத்தமிழர்களின் இனவழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும்,
ஈழத்தமிழர்களின் அரசியல் வேணவாவை வெளிப்படுத்தும் பொதுவாக்கெடுப்பையும் வலியுறுத்தியும்,
எமது மண்ணின் மக்களின் விடிவுக்காக தமிழக மாணவர்கள் நடாத்தும் மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்
கடந்ததிங்கட்கிழமை(18.03.2013)முதல் லண்டனில் அமைந்திருக்கும் இந்தியதூதரகத்தின் முன்பாக
மூன்றுதமிழ் இளைஞர்கள் தொடர்ச்சியான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தண்ணீரும் அருந்ததாமலேயே இந்த உண்ணாவிரதம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
தமிழகத்தில் எழுந்திருக்கும் பேரெழுச்சிக்கு ஆதரவாக புலம்பெயர்தேசங்களில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்துக்கும் எமது மக்கள் தமது ஆதரவை வழங்கவேண்டுமென எமது இணையம் வேண்டிநிற்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published.