வீழ்வோமென்று நினைத்தாயோ – முருகதாசன் திடலில் அணிதிரன்ட தழிழீழ மக்கள்.

இன்று ஐ நா முன்றலில் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும் எமக்காகக் குரல் எழுப்பும் தமிழ்நாட்டு மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை ஆதரித்தும் வீழ்வோமென்று நினைத்தாயோ என்னும் கோசத்துடன் நூற்றுக்கணக்கில் சுலிஸ்வாழ் தமிழ்மக்கள் திண்டு குரல் எழுப்பினர்.

இன்நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அத்துடன் தமிழ்நாட்டில் ஈழவிடுதலையை அங்கீகரிக்கக் கோரித் தீக்குளித்த அனைத்;து ஈகைப்பேரொளிகளுக்கும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

குறுகிய நாட்களில் எமது இளையவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் பெரும் தொகையான சுவிஸ்வாழ் தமிழீழமக்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *