சிலோன் ஏ.ஈ.மனோகரன் ( பொப் பாடகர்) காலமானார்
சுராங்கனி பாடல் புகழ் சிலோன் பொப் பாடகர் மனோகர் நேற்று மாலை இந்திய நேரம் 7.30 (22 January 2018) சென்னையில் காலமானார்.
இலங்கை இசைத்துறையில் தனி அடையாளங்களில் ஒருவராக விளங்கிய பாடகர் – திரை நடிகர், பொப் இசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் ( சிலோன் மனோகர், சுறாங்கனி மனோகர்) .
அழிந்துபோனது இலங்கையின் தமிழ்ப் பொப்பிசைக்கு சொந்தமான குரல் .
இலங்கையில் பொப்பிசைச் சக்கரவர்த்தி என்றும் தமிழகத்தில் சிலோன் மனோகர் என்றும் அழைக்கப்பட்ட பொப்பிசைப்பாடல்களை உலகளவில் கொண்டு சென்றவர்.
தென்னிந்திய தமிழ் திரைப்படங்களிலும் தனது திறமையை காட்டியிருந்தார்.
பல தமிழ்ப் பொப்பிசைப்பாடல்கள் சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மருவி வந்த காலத்தில் அவற்றைப்பாடியவர்களில் முதன்மையானவர் A.E. மனோஹரன் .தமிழ் ,சிங்களம் மற்றும் ஏனைய மொழிகளில் மொத்தம் 1000 ற்கு மேற்ப்பட்ட பாடல்களை பாடியவர்.