Search

செஞ்சோலை மாணவி தீபாவின் 13 ம் ஆண்டு நினைவு நாளில் உலகத்தமிழருக்கு செஞ்சோலை பிள்ளைகள் சொல்லும் செய்தி

செஞ்சோலை மாணவி தீபாவின் 13 ம் ஆண்டு நினைவு நாளில் உலகத்தமிழருக்கு செஞ்சோலை பிள்ளைகள் சொல்லும் செய்தி


” எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு இளம் பரம்பரை தோற்றம்கொள்ள வேண்டும்.ஆற்றல் மிகுந்தவர்களாக ,அறிவிஜீவிகளாக,தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக , நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும்.இந்த பரம்பரை எமது தேசத்தின் நிர்மாணிகளாக,நிர்வாகிகளாக ஆட்சியாளராக உருப்பெற வேண்டும்.”
தமிழீழ தேசியத் தலைவர் (01.11.1993 அன்று அறிவுச்சோலை இல்லம் திறந்துவைத்து உரையாற்றும் போது கூறப்பட்டது.)

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் தலைவர்மாமாவின் நேரடியான அரவணைப்பில் நாங்கள் எல்லோரும் சோலைக்கிளிகளாக மிகுந்த மகிழ்ச்சியுடன் சிறகடித்துக்கொண்டு இருந்தகாலத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சி செய்தி என்னவென்றால் தீபா என்ற பிள்ளையை காணவில்லை என்பதே.அனைவரும் ஒருநாள் முழுவதும் தேடி அழைந்தோம் ஆனால் அவள் கிடைக்கவில்லை .எல்லோரும் சோகத்தில் இருந்தோம்.அதன் பின்பு பெரியம்மாவின் ஒழுங்குபடுத்தலில் விசேட பிரிவின் போராளிகளின் உதவியுடன் கிணற்றில் இருந்து சடலமாக தீபாவை மீட்டார்கள்.அந்த நேரம் செஞ்சோலை இல்லமே சோகத்தில் மூழ்கி இருந்தது.இந்த பிள்ளையின் இறப்ப செய்தி உடனடியாக தலைவர்மாமாவிற்க்கு போய்சேர்ந்தது.2005 ஆம் ஆண்டு தலைவர்மாமா பல அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தகாலம்.தனது பிள்ளையின் இறப்புச் செய்தியைக்கேட்டு அனைத்து வேலைகளையும் நிறுத்தி பிள்ளையின் இறப்பிற்கான காரணத்தை கண்டறியும்படி மாமி(மதிவதனி) அவர்களுக்கு பொறுப்பு வழங்கி விசேட குழு அமைக்கப்பட்டது. அந்த விசேடகுழுவில் பொட்டுமாமா,நடேசன்மாமா,சூசைமாமா,கபிலன் மாமா என்று பல முக்கிய உறுப்பினர்களும் மாமாவின் விசேட உறுப்பினர்களும் இந்த குழுவில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தக்குழு தீபா என்ற பிள்ளையின் இறப்பிற்கான காரணத்தை துள்ளியமாக மாமாவிற்க்கு வழங்கி இருந்தார்கள்.அதன்பின்புதான் தலைவர்மாமா அமைதி அடைந்தார்.பெற்றோரை இழந்த பிள்ளைகளில் எப்படியான அக்கறை கொண்டவர் என்பதை உலகத்தமிழர்கள் அறிந்திருந்தும் ஏன் எங்களை திரும்பி பார்க்கின்றார்கள் இல்லை என்பதே எங்கள் கவலை.

ஆயுதபோராட்டம் மௌனித்து பலவருடங்கள் கடந்த நிலையில் இலங்கைத்தமிழ் பொறியியலாளர்களும் ஏனைய படித்த சமூகமும் இணைந்து “”உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகம்”” என்ற அமைப்பின் ஊடாக எங்களுக்கு திருமணம், வாழ்வாதாரம், கல்வி உதவி என அணைத்தையும் செய்து வருகின்றார்கள். இந்த அமைப்பின் திட்டமிடல், ஒழுங்குகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் என்பன அனைத்து சமூகத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைகின்றது.பெற்றோரை இழந்த பிள்ளைகளாகிய நாங்கள் அணைவரும் தலைவர்மாமா எங்களுக்கு என்ன சொல்லி வளர்த்தாரோ அதை இவர்களுடன் இணைந்து செய்வோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்கள் அப்பாவாகிய தலைவர்மாமாவை நேசிக்கின்ற உலகத்தமிழ்மக்களே உங்கள் அனைவருக்கும் அவரது பிள்ளைகளாகிய நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எமது படித்த சமூகமும் விசுவாசமான மக்களும் இணைந்து நடத்தும்”” உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகம்”” என்ற அமைப்பிற்க்கு உதவிகளை செய்யுங்கள். அவர்கள் எங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவியை செய்வதோடு எமது தாயகத்தை சிங்கப்பூர் , ஐப்பான் , இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் மாதிரி உருவாக்கி காட்டுவார்கள் என்பது உண்மை. உலகத்தமிழர்கள் அணைவரும் ஒன்று படுவோம்.
# கல்வியால் மாற்றத்தை ஏற்படுத்துவோம்#

தொன்பொஸ்க்கோ சிறுவர் இல்லம்,
றம்பைக்குளம்
வவுனியா.
Leave a Reply

Your email address will not be published.