Search

யா/வல்வை சிவகுரு விதியாசாலை  இல்ல மெய்வல்லுநர் போட்டி அதிபர் தலைமையில் முதல் நிகழ்வாக  மாணவ மாணவிகளுக்கான மரதன் நடைபெற்றுள்ளது 27.01.2018

யா/வல்வை சிவகுரு விதியாசாலை  இல்ல மெய்வல்லுநர் போட்டி அதிபர் தலைமையில் முதல் நிகழ்வாக  மாணவ மாணவிகளுக்கான மரதன் நடைபெற்றுள்ளது 27.01.2018

 

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாடசாலையின் அதிபர் வெற்றி பதக்கங்களை அனுவித்து கௌரவித்தார்.

 

இதில் பாடசாலையின் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் ஊர் பெரியவர்களும் சமுக ஆர்வலர்களும் இம்முறை அனுசரணை வழங்கும் பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

 

இப்பாடசாலையின்   இல்ல மெய்வல்லுநர்  போட்டி அதிபர் தலைமையில் எதிர் வரும் மாசி மாதம் 06 திகதி வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் 1.30 மணிக்கு  நடைபெறள்ளது 27.01.2018

இவ்விளையாட்டு போட்டிக்கு ஒவ்வொருவருடமும் ஒவ்வொரு ஆண்டு பழைய மாணவர்கள் அனுசரனை வழ ங்கி இல்ல மெய்வல்லுநரை சிறப்பிப்பது போன்று இம்முறையும் சிறப்பித்து வழங்குகின்றார்கள்.

 

வல்வை சிவகுரு விதியாசாலை விளையாட்டு மாத்திரம் அன்றி கல்வி வளர்ச்சியிலும் மிகுந்த முன்னேற்றதை நோக்கி அனுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றது அவை  பாடசாலை முடிவடைந்த பின் ஆசிரியர்கள் எதுவித ஊதியம் பெறாமல் மெல்லகல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் பயிற்சியும் 10,11(O/L) ஆண்டு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளும் இரவு நேர வகுப்புகளும் நடைபெற்றுவருகின்றது.

 

பாடசாலையின் கட்டட  அபிவிருத்தியை நோக்கின் பொது மண்டபம் Level seet செய்யப்பட வேண்டியுள்ளது.இதில் ஒரு பகுதிக்கு ஒரு இலட்சம் வீதம் நான்கு இலட்சம் தேவையாகவுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published.