கிளிநெச்சி விளையாட்டுக்கழகக் காணி சிங்கள தொழிலதிபருக்கு தாரைவார்ப்பு! இப்படியானால் எப்படிநல்லிணக்கம்?

கிளிநெச்சி விளையாட்டுக்கழகக் காணி சிங்கள தொழிலதிபருக்கு தாரைவார்ப்பு! இப்படியானால் எப்படிநல்லிணக்கம்?

முல்லைத்தீவில் காணிகள் அற்ற நிலையில் 11206 குடும்பங்கள் – கிளிநொச்சி 12000 மேற்பட்ட மக்கள் காணிகள் இன்றித் தவிப்பு –

 

இப்படியானால் எப்படிநல்லிணக்கம்? கிளிநெச்சி விளையாட்டுக்கழகக் காணி சிங்கள தொழிலதிபருக்கு தாரைவார்ப்பு

முல்லைத்தீவில் காணிகள் அற்ற நிலையில் 11206 குடும்பங்கள் –

கிளிநொச்சி 12000 மேற்பட்ட மக்கள் காணிகள் இன்றித் தவிப்பு –

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியிருப்பதற்க காணிகள் அற்ற நிலையில் 11206 குடும்பங்கள் பிரதேச செயலங்கள் ஊடாக பதிவுகளை மேற்கொண்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தின் தகவல்கள் மூலம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது. மேற்படி 11206 குடும்பங்களும் நீண்ட காலமாக காணிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும் இதனால் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிரந்தர உதவிகளை பெற்றுக் கொள்ளமுடியாது வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது எனவே முல்லைத்தீவில் உள்ள அரச காணிகளை காணியற்ற இம்மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டகாலமாக அரச மற்றும் எனைய திட்டக்காணிகளில் வசித்து வருகின்ற போதும் அவர்களுக்கு இதுவரைக்கும் காணிதொடர்பான எவ்வித ஆவணங்களும் இன்றி இருப்பதாகவும் இவர்களும் மீள்குடியேற்றத்திற்கு பின்னரான வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட உதவிகளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத் தகவல்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு  தெரிவித்தன.

மேலும் இந்த காணிகள் அற்ற அல்லது காணிகளில் இருந்தும் ஆவணங்கள் இன்றி உள்ள மக்கள் அனைவரும் வறுமைகோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்றும் எனவே மீள்குடியேற்றத்தின் பின்னரான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை அவர்களின் வறுமை நிலைமையில் மேலும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக பிரிவில் 3910 குடும்பங்களும்,ஓட்டுச்சுட்டான பிரதேச செயலக பிரிவில் 2735 குடும்பங்களும், கரைதுரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 3153 குடும்பங்களும்,துனுக்காய் பிரதேசசெயலக பிரிவில் 1158 குடும்பங்களும்,மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 250 குடும்பங்களும் காணிகள் அற்றவர்களாக பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி 12000 மேற்பட்ட மக்கள் காணிகள் இன்றி இருப்பதும் தெரியவந்துள்ளது

இதேவேளை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் காணியற்ற நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் இரானுவம் பல நூற்றுக்கணக்கான்  ஏக்கர் மக்களின காணிகளை அத்துமீறி தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் நீண்ட காலமாக இந்த மாவட்டங்களில் காணிகள் அற்று மக்கள் வாழந்து வரும் நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள அரச காணிகளை காணிகள் அற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாத நிலையில் மாவட்ட மற்றும் மாகாண அதிகாரிகளை வடக்கு ஆளுநர் அடக்கி வைத்திருப்பதோடு இதுவரைக்கும் பிரதேச செயலாளர்களிடம் இருந்து வந்த காணிதொடர்பிலான சிறு அதிகாரத்தினையும் 2013 வெளியிட்ட ஒரு சுற்றுநிருபததின் மூலம் வடக்கு ஆளுநர் அபகரித்து விட்டார்.

இதன்பின்னர் வடக்கில் காணியற்ற மக்களுக்கு காணிகள் வழங்குவதில் எவ்வித அக்கறையும் காட்டாத ஆளுநர் வடக்கிலுள்ள அரச காணிகளை இரானுவத்திற்கும் சிங்கள தொழிலதிபர்களுக்கம் வழங்குவதில் அதிக அக்கறை எடுத்து வழங்கி வருகின்றார் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கு அன்மைய உதாரணம் ஏ9 வீதியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஞான வைரவர் விளையாட்டுக்கழக்கத்திற்கு சொந்தமான பெறுமதிமிக்க காணியினை நாமலின் தனிப்பட்ட உதவியாளராக இருக்கும் வஜிர என்பவரின் தலையீட்டில் வடக்கு ஆளுநர் சந்திரசிறி தனது அடக்கி ஆளும் பாணியில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலருக்கு விடுத்த கட்டளைக்கு அமைவாக ஒரு சிங்கள தொழிலதிபருக்கு தொழிற்சாலை அமைப்பதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது அந்த காணியில் ஆங்கிலத்ததில் எழுதப்பட்ட உட்செல்லத்தடை (NO ENTRY) என்ற அறிவித்தல் பலகை போடப்பட்டிருக்கிறது.

2009 க்கு முன்னரும் அதற்கு பின்னரும் மிக நீண்ட காலமாக கிளிநொச்சி நகரை அண்டிய இளைஞர்கள் அந்த மைதானத்தினை பயன்படுத்தி வந்தமை கிளிநொச்சியிலுள்ளவர்களுக்கு மற்றும் அன்றி ஏ9 வீதியில் பயணிக்கும் அனைவருக்கும் தெரிந்ததே

இப்படியென்றால் எப்படி நல்லிணக்கம்…….. ?

Leave a Reply

Your email address will not be published.