இன்று அனுசரிக்கப்படும் புவி கால நேரத்தில்(Earth Hour) உலகம் முழுவதிலுமிருந்து 7000 நாடுகள் பங்கேற்கின்றன.
புவி கால நேரத்தில் ஒரு மணி நேரம் விளக்குகள் அணைத்து வைக்கப்படும்.
அதாவது அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முதல் அவுஸ்திரேலியாவின் ஓபரா மாளிகை வரை இன்று மாலை இருட்டில் மூழ்கியிருக்கும்.
இது குறித்து உலக வன உயிர் மற்றும் இயற்கை நிதி அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ரிட்லி கூறியதாவது, உலகின் தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்த புவி கால நேரம் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட புவி கால நேரத்தின் போது அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 22 லட்சம் கட்டிடங்களில் உள்ள மின் விளக்குகள் ஒரு மணி நேரத்துக்கு அணைத்து வைக்கப்பட்டன.
2008ம் ஆண்டு முதல் உலகில் உள்ள பல நகரங்களில் புவி கால நேரம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் 7000 நாடுகள் புவி கால நேரத்தில் பங்கேற்கின்றன. இம்முறை பாலஸ்தீனம், துனிசியா உள்ளிட்ட நாடுகளும் முதன்முறையாக பங்கேற்க உள்ளன என்று தெரிவித்துள்ளார்.









