அகதிகள் முகாமில் தீ விபத்து: 30 பேர் உடல் கருகி பலி

அகதிகள் முகாமில் தீ விபத்து: 30 பேர் உடல் கருகி பலி

தாய்லாந்தில் அகதிகள் முகாமில் ஏற்பட்டதீ விபத்தில் 30 பேர் பரிதாபமாக உடல்கருகி பலியாயினர்.

தாய்லாந்து- மியான்மர் எல்லைப்பகுதியான வடக்கு மாயே ஹாங்சன் மாகாணத்தில் மாயேசூரின் என்ற அகதிகள் முகாம் உள்ளது.

இங்கு மியான்மரில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இங்கு நேற்று இரவு திடீரென தீப்பிடித்தில் 30 பேர் உடல்கருகி பலியாயினர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வீட்டில் சமையல் செய்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இதுகுறித்து விசாரணைக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.