கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரபல சிங்களப் பத்திரிகையொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைப் பேரவையின் சகல கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரையில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்.
இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறு நவநீதம்பிள்ளையிடம் இந்தியா கோரியுள்ளது.
எனினும், விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் இலங்கைக்கு விஜயம் செய்யப் போவதில்லை என நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.