போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது

போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது
நிரந்தர சமாதானம், சௌபாக்கியத்தை ஏற்படுத்தி, இனங்களுக்கு இடையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, போர் குற்றங்களை செய்தவர்களை தண்டனை வழங்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியவசியமானது என ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஒ பிளேக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான யோசனை நீர்த்து போக செய்யப்பட்டுள்ளதாக சில தரப்பினர் சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும்  இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இம்முறை மனித உரிமை பேரவையின் ஊடாக இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்றப்பட்ட யோசனையின்படி இலரங்கை செயற்பட தவறினால், சர்வதேச சமூகம் அடுத்த எடுக்கும் நடவடிக்கை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பிளேக்,  அது பற்றி தற்போதே எதனையும் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.