வல்வை சைனிங்ஸ் கந்தையா மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ணத்தை வல்வை நேதாஜி சம்பியனை தட்டிச்சென்றது.
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழக அமரர் கந்தையா மகாலிங்கம் ஞாபகார்த்தமாக வல்வைக்கைட்பட்ட கழகங்களிற்குடையே அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டுக்கழகமானது மோதியது.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களினை பெற்று ஆட்டம் சமனிலை வகித்தது. இரண்டாம் பாதியாட்டத்தில் நேதாஜி விளையாட்டுக்கழகமானது மேலதிகமாக ஒரு கோலினை பெற்று ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டம் முடியும் தறுவாயில் ரேவடி அணிக்கு கிடைத்த தண்ட உதை வாய்ப்பை சரியாக அவ்வணி பயன்படுத்தாமல் விட நேதாஜி அணியானது 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக நேதாஜி விளையீட்டுக்கழகத்தை சேர்ந்த தர்சனும் தொடராட்ட நாயகனாக ரேவடி விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த ரஞ்சனும் தெரிவாகினர் .









