இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை மூடாவிட்டால் இழுத்து மூடும் போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
ஏப்ரல் முதலாம் திகதிக்குள் இலங்கை தூதரகத்தை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக திருச்சியில் கல்லூரி மாணவர்கள் இணைந்து, அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் காந்தி வழியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்களது வாக்காளர்கள் அட்டையை குடும்பத்துடன் வட்டாசியர் அலுவலகத்தில் ஒப்படைக்க இருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா வர்த்தக ரீதியில் எந்த வித உதவியும் செய்யக் கூடாது என வலியுறுத்தி தமிழகத்திலுள்ள பல்வேறு மக்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.