வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டங்களின் படத்தொகுப்பு 24.03.2013

வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான 9பேர் கொண்ட (விலகல் முறையிலான) மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டங்கள் 24.03.2013 இன்று சிதம்பரா கல்லூரியின் மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றன.முதலாவது மூன்றாவது தெரிவுக்கான போட்டியில் அல்வாய் நண்பர்கள் அணியை எதிர்த்து பாசையூர் சென் அன்ரனீஸ் அணி மோதியது. இதில் 2:1 என்ற கோல்களை போட்டு சென் அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம் 3ம் இடத்தை தனதாக்கிகொண்டது.நான்காவது இடத்தை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.1ம்,2ம் இடத்திற்கான இறுதியாட்டம். கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளவாலை யங்ஹன்றிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.இதில் 2:1 என்ற கோல்களை போட்டு கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றறு.1ம் இடத்தை தனதாக்கிகொண்டது.இரண்டாவது இடத்தை இளவாலை யங்ஹன்றிஸ் விளையாட்டுக்கழகம் தனதாக்கிகொண்டது.வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர் .

Leave a Reply

Your email address will not be published.