இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் நகரத்தில் உள்ள ஒரு இளைஞர் தன்னுடைய ஆடி காரில் மிக வேகமாக பயணம் செய்த போது, காரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டிற்கு
காரை மோதிவிட்டார். இதனால் பயங்கர சப்தத்துடன் மோதிய கார் பெருமளவு சேதமாகியதோடு, அந்த இளைஞரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்.
கார் மோதிய வீட்டில் மூன்று நபர்கள் இருந்துள்ளார்கள். வீட்டின் மீது ஏதோ மோதியதாக சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த் அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். கார் வேகமாக மோதியதால் அவர்கள் வீட்டின் சுவரில் ஓட்டையே விழுந்துவிட்டது.இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பாகியுள்ளது.