மாவீரன் நெப்போலியன் மனைவிக்கு அணிவித்த வைரமோதிரம் ரூ.5 1/2 கோடிக்கு ஏலம்

மாவீரன் நெப்போலியன் தனது முதல் திருமணத்தின் போது மனைவி ஜோசபினுக்கு அணிவித்த வைர மோதிரம் ரூ.5 1/2 கோடிக்கு ஏலம் போனது.

18ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த மோதிரம் பிளவுபட்ட நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதில் பதிக்கப்பட்டுள்ள நீல நிற கற்களும், வைரக் கற்களும் ஒரு காரட் எடைக்கும் அதிகமானதாகும். இந்த அறிய வகை மோதிரம், பிரான்சில் உள்ள ஓசெனாட் மையத்தில் ரூ.5 1/2 கோடிக்கு(ரூ.550 லட்சத்துக்கு) ஏலம் போனது.

ஏற்கனவே, இதை வோ

ஷிங்டனில் ஏலம்விட ஏற்பாடு செய்யப்பட்ட போதும் பிரான்சில் நிர்ணயிக்கப்பட்டதைவிட 50 மடங்கு அதிகமாக ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *