திருச்சி, கரூர், பெரம்பலூர் நாடாளுமன்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தமிழக் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் இன்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர்களை வரவேற்க மண்டபத்தின் முன் பிளக்ஸ் பேனர்கள் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. காலை கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்த போது 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மண்படம் முன் கூடினர். பின்னர், இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதாக கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்த பிளக்ஸ் போர்டு மற்றும் கட்-அவுட்டுகளை அடித்து நொறுக்கினர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருமண மண்டபத்திற்குள் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியே வந்தனர். அப்போது மாணவர்களுக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும் மாணவர்கள் ஓடி விட்டனர். தங்கள் கூட்டத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை என கூறி காங்கிரஸ் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாநில தலைவர் ஞானதேசிகன் காங்கிரஸ் நிர்வாகிகளை சமரசம் செய்து அழைத்து சென்றார்.
இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம்:திருச்சியில் மாணவர்கள்- காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்













Leave a Reply