ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஆப்கன் ராணுவமும், நேட்டோ படையினரும் இணைந்து அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். லோகர் மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடத்திய இந்த தாக்குதல் நேற்று இரவு முடிவடைந்தது.இதில் 20-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உள்ளூர் தலிபான் கமாண்டர் ஒருவரும் கொல்லப்பட்டதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பராக்கி பராக் மாவட்டத்தில் 2 பொதுமக்கள் காயடைந்தனர். ஆனால், ஆப்கான் படையினரோ அல்லது சர்வதேச படையினரோ காயம் அடைந்தார்களா என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
தலிபான்களிடம் இருந்து 2 ஆப்கன் வீரர்களை மீட்பதற்காக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 24 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டதாக நேட்டோ ராணுவம் தெரிவிக்கிறது.