பருத்தித்துறை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் நடைபெற்றுவருகின்றது
பருத்தித்துறை கோட்ட கல்வி பணிப்பாளர் திரு நந்தகுமார் அவர்களின் தலைமையில் ஹாட்லி கல்லூரி மைதானத்தில் 08.03.2018 ஆரம்பித்து இன்றும் நடைபெற்றுருகின்றது.
பல பாடசாலைகள் கலந்து தங்கள் தங்கள் திறமைகளை காட்டி விளையாட்டுக்களை விறுவிறுப்படைய வைத்திருந்தது. இது மூன்று நாட்களைக்கொண்ட வலய மட்டத்திற்கான விளையாட்டு வீரகளை செய்கிறதாகவும் அமைகிறது.
இதில் தெரிவாகின்றவர்கள் வலய மட்ட விளையாட்டுக்களில் பங்கு பற்றுவார்கள் இவ்வலயமானது மூன்று கோட்டமாக அமைகிறது பருத்தித்துறை கோட்டம் கரவெட்டி கோட்டம் மருதங்கேணி கோட்டம் இம் மூன்றும் வலயமாகும்.
வலயங்களில் இருந்து தெரிவு செய்கின்றவர்கள் மாவட்டத்திற்கும் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்கின்றவர்கள் மாகாணத்திற்கும் மாகாணத்தில் இருந்து தெரிவு செய்கின்றவர்கள் தேசியத்திற்கும் தெரிவு செய்யப்படுவார்.
இவ்விளையாடுப்போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தில் பூரணமாக சுத்துமதில் அமைக்கப்பட்ட தங்குமிட வசதிகளுடனும் அழகான மைதானமாக காட்சியளித்தது