பிரித்தானியா செய்திகள்

கடன் அட்டை மோசடிகளின் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது

சர்வதேச கடன் அட்டை மோசடிகளின் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது என ஐரோப்பிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உலகின் பாரியளவில் கடன் அட்டை மோசடியில் ஈடுபடும் நபர்கள் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை மையமாகக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 44 பேர் நேற்றைய தினம் ரோமானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இணையத்தின் ஊடாக இவ்வாறு கடன் அட்டை மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலத்திரனியல் சாதனங்கள், போலி கடன் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன.ஆர்ஜன்டினா, கொலம்பியா, டொமினிக்கன் குடியரசு, இலங்கை, தாய்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், மெக்ஸிக்கோ உள்ளிட்ட நாடுகளை மையமாகக் கொண்டு இவ்வாறு கடன் அட்டை மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *