வல்வை றெயின்போ பவளவிழா மென்பந்து 2நாள்,சுற்றில் உதயசூரியன்,இளங்கதீர் வெற்றி பெற்றது
வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் (பவளவிழா) 75ம் ஆண்டு நிறைவு விழா
வல்வை வி.கழகத்திற்குட்பட்ட 06 கழங்களுக்கிடையிலான 9 நபர் 8 பந்து பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி
இரண்டாம் நாள் மென்பந்து போட்டி வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் வல்வை உதயசூரியன் விளையாாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது.
இதில் வல்வை உதயசூரியன் விளையாாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.இவ்வாட்ட ஆட்டநாயகனாக வல்வை உதயசூரியன் விளையாாட்டுக்கழகத்தை சேர்ந்த கஜேந்்திரன் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது சுற்றில் இளங்கதீர் வி.க எதிர் சைனிங்ஸ் வி.க மோதி. இளங்கதீர் வி.கழகம் வெற்றி பெற்றது.
இவ்வாட்ட ஆட்டநாயகனாக வல்வை இளங்கதீர் விளையாாட்டுக்கழகத்தை சேர்ந்த மயூரன் தெரிவு செய்யப்பட்டார்.