முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது சிங்கள இனவாத அமைப்பு வன்முறை! (காணொலி)

இலங்கையின் மிகப்பிரபலமான முஸ்லீம் வர்த்தகரின் ஆடைவிற்பனை நிலையமான பசன் பக் இலங்கை நேரம் 28.03.2013 இரவு பொதுபல சேனாவால் அடித்து நொருக்கப்பட்டு உள்ளது. பொரலஸ்கமுவ பெபிலியானவில் அமைந்துள்ள ‘பெஷன் பக்’ (Fashion Bug ) ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இன்றிரவு 8 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆயுதங்களாலும் கற்களை எறிந்தும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நீண்ட நேரம் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 பேர் வரையிலான அணியினரே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் பிரபல முஸ்லீம் வர்தகரின் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்திற்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பலபாகங்களில் கிளைகளைக் கொண்டுள்ள இந்த வியாபார ஸ்தலத்திற்கு ஏற்கனவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *