
2009ம் ஆண்டின் பின்னர் வட,கிழக்கில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டன. அந்த நிலத்தில் இராணுவ முகாம்களும், சிறைச்சாலைகளும் அமைக்கப்பட்டன.
மேலும் விசுவமடு- தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்குரிய நிலத்தில் வீதி புனரமைப்பிற்கான கற்களும், மண்ணும் கொட்டப்பட்டுள்ளது. இதனோடு கனகபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட சில மாவீரர் துயிலும் இல்லத்திற்கான, நிலத்தில் படையினர் மக்களை குடியேற்ற பல வழிகளிலும் முயற்சிகள் எடுத்திருந்தனர். ஆனால் மக்கள் எவரும் அதனை விரும்பாத நிலையில் அந்த இடத்தில் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்குரிய நிலத்தில் இதுவரை வட,கிழக்கில் இடம்பெற்றிராத புதுமையாக வட மாகாண மின்சாரசபையினை கட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு, அதற்கான பெயர் பலகையும் இடப்பட்டாயிற்று. எனினும் அப்பகுதி மக்கள் பலர் இதற்கு மறைமுக எதிர்ப்பினை தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது.