இலங்கை தொடர்பில் தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கையில் தனி ஈழம் அமைக்கப்பட வேண்டுமென தமிழக சட்ட மன்றில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தை உணர்வுகளை மதிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இலங்கையை எதிரி நாடாககக் கருதவும் இல்லை, பொருளாதாரத் தடை விதிக்கும் உத்தேசமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநில அரசாங்கங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அதேவேளை, மாநில அரசாங்கங்களின் அனைத்து தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என சல்மான் குர்ஷித் தெரிவித்துள்