அமெரிக்கா: இரகசியத் துறைக்கு தலைவராக முதன்முறையாக ஒரு பெண்

அமெரிக்க அதிபர் குடும்பத்தை பாதுகாக்கும், ரகசிய பிரிவின் தலைவர் பதவிக்கு, முதல்முறையாக, பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இதுகுறித்து, அதிபர் ஒபாமா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:அமெரிக்க மக்களையும், பொருளாதாரத்தையும் மட்டும் அல்லாமல், அரசியல் தலைவர்களையும், அதிபர் குடும்பத்தினரையும் பாதுகாப்பது, “யுனைடட் ஸ்டேட்ஸ் சீக்ரெட் சர்வீஸ்'(யு.எஸ்.எஸ்.எஸ்.,) அமைப்பு.இந்த அமைப்பின் தலைவராக, ரகசிய துறைகளில் அனுபவம் உள்ள, ஜூலியா பியர்சன், 53, நியமிக்கப்பட்டுள்ளார்.திறமைவாய்ந்த ஜூலியா, இத்துறையில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களை, சிறப்பாக வழிநடத்துவார்“ என ஒபாமா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *