வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் நடத்திய 9 நபர் கொண்ட 10 பந்து பரிமாற்றத்தை கொண்ட மென் பந்தாட்ட போட்டியின்
இறுதி போட்டி மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டிகள் இன்று 21.01.12 நெடிய காடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்விற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவலிங்கம் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் மயிலேறும் பெருமாள்
மற்றும் வல்வெட்டித்துறை நகர சபை உப தலைவர் சதிஸ் மற்றும் நெடியகாடு விளையாட்டுகழகத்தின் தலைவரும் நகரசபை உறுப்பினருமான
சு சே குலநாயகம் மற்றும் வல்வை விளையாட்டுகழகத்தின் தலைவர் மு .தங்கவேல் ஆகியோர் விருந்தினராக வருகை தந்தனர் மூன்றாம் சுட்டு போட்டியில் வல்வை விளையாட்டு கழகம் நான்காம் இடத்தை பெற்று நான்காம் இடத்திற்கான கிண்ணத்தை கைபற்றியது.
கிரிக்கெட் வீரர்களுக்கான இந்த சீருடைகளை லண்டனில் இருக்கும் வல்வையை சேர்ந்த திரு. கணேசரட்ணம் ஜீவாகரன் (ஜீவன்) அன்பளிப்பாக வழங்கியுள்ளார், அவருக்கு வல்வை விளையாட்டுக் கழகமும், வீரர்களும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.