சைனிங்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி.
வல்வை ரேவடி விளையாட்டுக்கழகமானது மறைந்த வீரன் நிமலன்(குட்டி) ஞாபகார்த்தமாக வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை நடாத்தி வருகின்றது… இன்று இடம்பெற்ற ஆட்டத்தில் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளங்கதிர் B விளையாட்டுக்கழகமானது மோதியது…
ஆட்டமுடிவில் 2:1 என்ற கோல் கணக்கில் சைனிங்ஸ் அணி வெற்றி பெற்றது.சைனிங்ஸ் அணி சார்பாக உதயகுமார்,பிரசாந் தலா 1 கோல்களை போட்டனர்.