இந்தியா என்பது சென்னையோ, தமிழ் நாடோ அல்ல எனவும் அரசியல் காரணமாக விளையாட்டுக்கு பாhதிப்போ, தடைகளை ஏற்படக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தவைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.
இந்திய ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைஸ் ஐத்ராபாத் அணியின் தலைவரான சங்ககார, இந்த ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கையை பிரதிநித்துவப்படுத்துவதற்காகவே , தாம் ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்டுள்ளதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் விளையாட இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை. இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை முழு தமிழ் நாடு ஏற்றுக்கொள்கிறதா என்பதை தேடிப்பார்க்க வேண்டும் எனவும் சங்ககார தெரிவித்துள்ளார்.