லண்டனில் இன்று நடைபெற்ற மாபெரும் எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்: இது மிகப்பெரிய இனப்படுகொலை!- பாரதிராஜா (காணெளி.படங்கள்)

லண்டனில் இன்று நடைபெற்ற மாபெரும் எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்: இது மிகப்பெரிய இனப்படுகொலை!- பாரதிராஜா (காணெளி.படங்கள்)

ஐ.நா.மூலமாக இலங்கை மீது சர்வதேச சுயாதீன விசாரண மற்றும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்தக்கோரியும் இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி தற்போது பெரும் எழுச்சியுடன் இடம்பெற்று வருகின்றது.

65 ஆண்டுகால இன அழிப்பிற்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா. சர்வதேச சுயாதீன விசாரணையை நடாத்த வலியுறுத்தியும்,

தமிழீழ மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா தமிழீழத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமீழ மக்களிடமும் நடாத்தக் கோரியும்,

தமிழக மாணவர்களின் எழுச்சிக்கு வலுச்சேர்க்கவும் அனைத்து மக்களும் அணிதிரளுங்கள் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டப் போரணியில் பாரதிராஜா சிறப்புரையாற்றியதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியும் உரையாற்றினார்.

லண்டன் பேரணியில் பங்கேற்ற பாரதிராஜா தனதுரையில்,

லண்டனின் மாபெரும் சதுக்கத்தில் ஈழத் தமிழர்களின் போராட்ட நிகழ்வில் பங்கேற்பதில் பாவப்பட்ட பாரதிராஜாவாகிய நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இலங்கையில் நடந்தது மிகப் பெரிய திட்டமிட்ட இனப்படுகொலை. அந்த மாபெரும் இனப்படுகொலையைச் செய்த பாதகனை உலக நீதி மன்றின் முன் நிறுத்த வேண்டும்.

நாங்கள் எந்த நாடுகளில் வாழ்ந்தாலும் பேதம் பார்க்காமல் எல்லாத் தமிழ் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து தமிழீழத்துக்காகப் போராட வேண்டும்.

இனத்துக்காக, மொழிக்காக கிளர்ந்து எழுந்துள்ள தமிழக மாணவர்களை நாங்கள் பாராட்ட வேண்டும். இந்தப் பேரெழுச்சி தாமதமானதாக இருந்தாலும் வரவேற்கத் தக்கது

Leave a Reply

Your email address will not be published.