பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் நிலவையில் உள்ள முறைப்பாடுகள் உரிய முறையில் துரித கதியில் விசாரணை செய்யப்பட வேண்டுமென சட்டவிரோத கடத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழு கோரியுள்ளது.
கடத்தல் காணாமல் போதல்கள் n;தாடர்பிலான 5676 முறைப்பாடுகள் இன்னமும் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போதல் தொடர்பில் நான்கு முறைப்பாடுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக குறித்த ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது,
முறைப்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் பதில்கள் திருப்தி அடையக் கூடிய வகையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல பிரஜைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளது.