அதிகூடிய சேமிப்புக் கொள்ளளவு உடைய Seagate வன்தட்டுக்கள் அறிமுகம்

அதிகூடிய சேமிப்புக் கொள்ளளவு உடைய Seagate வன்தட்டுக்கள் அறிமுகம்

தற்போது காணப்படும் கணனிச் சேமிப்புச் சாதனங்களில் 1TB அளவே மிகவும் உயர் சேமிப்புக் கொள்ளளவு உடையவையாக காணப்படுகின்றன.

எனினும் இவ்வாறான ஒன்றிற்கு மேற்பட்ட வன்றட்டுக்களை இணைத்து இவ் அளவை விடவும் கூடிய சேமிப்புக் கொள்ளளவை பெறக்கூடியதாகக் காணப்பட்டது.

ஆனால் தற்போது 4TB கொள்ளளவை ஒரே வன்தட்டில் உள்ளடக்கியதாக Seagate நிறுவனத்தின் வன்தட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 1TB கொள்ளவுடைய 4 பிளட்டர்கள் (Platters) காணப்படுகின்றன.

இவை 1979ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது டெக்ஸ்டாப் கணனி வன்தட்டுக்களைக் காட்டிலும் 800,000 மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவற்றில் 450 மணித்தியாலங்கள் நீளமான HD திரைப்படங்களை சேமிக்க முடிவதுடன், 1 மில்லியன் வரையான பாடல்களை சேமிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது. தவிர தகவல் பரிமாற்றமானது செக்கனுக்கு 146MB என்ற வீதத்தில் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

இவ்வன்றட்டுக்களின் பெறுமதி 190 அமெரிக்க டொலர்கள் வரையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.