கூந்தல் உதிர்வதை தடுக்க ஆயுர்வேத குறிப்புகள்

கூந்தல் உதிர்வதை தடுக்க ஆயுர்வேத குறிப்புகள்

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து முதல் நாள் இரவு நீரில் வேகவைத்து அடுத்த நாள் வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும். இவ்வாறு வாரம் இரு செய்து வர வேண்டும். ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

• கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை சம அளவு கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

• வெந்தயம், குன்றிமணியை சம அளவு எடுத்து பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஊறவைக்க வேண்டும். இந்த பொடி ஒரு வாரத்திற்கு நன்றாக ஊற வேண்டும். பின்னர் இந்த எண்ணெயை தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

• மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால் செம்பட்டை முடி நிறம் மாறும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வரலாம்.

• ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சிவும். இந்த எண்ணெயை தலையில் தினமும் தொடர்ந்து தேய்த்து வந்தால் கூந்தல் நீளமாக வளரும்.

Leave a Reply

Your email address will not be published.