பிரித்தானியா செய்திகள்

1500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்து கிடந்த பழமையான ஒயின் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

இஸ்ரேலில் ஆஷ்கெலான் நகரில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டபொழுது, ஹாமி யோவ் என்ற இடத்தில் ஒயின் தொழிற்சாலை ஒன்று புதையுண்டு கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

அதில் செராமிக்கால் வடிவமைக்கப்பட்ட சிறிய கிறிஸ்தவ தேவாலயமும், சிலுவைகளும் இருந்தன. எனவே அந்த தொழிற்சாலை ஒரு கிறிஸ்தவருக்கு சொந்தமாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் அந்த ஒயின் தொழிற்சாலையில், திராட்சை தோட்டத்தில் இருந்து திராட்சைகளை கொண்டு வந்து சாறுபிழிந்து அதை ஊற வைத்து ஒயின் தயாரித்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

இந்த தொழிற்சாலை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோன்று ஆஷ்கெலான் நகரிலும் மண்ணில் புதைந்து கிடந்த மூன்று ஒயின் தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *