ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவும் மென்பொருள்

ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவும் மென்பொருள்

தற்போதைய காலகட்டத்தில் அனைத்து துறைகளும் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாக ஒன்லைன் மூலமான கொடுக்கல் வாங்கல்கள் பிரபலமடைந்துவருகின்றன.

எனினும் இவ்வாறு ஒன்லைன் முறைகளைப் பயன்படுத்தும்போது அச்சேவைகளை வழங்கிவரும் இணையத்தளங்ளிலிருந்து https எனப்படும் SSL புரட்டக்கோலினூடாகவே அதனைப் பயன்படுத்துபவரின் உலாவிக்கு தகவல்கள் பரிமாற்றம்படுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் போலியான இணைய முகவரிகளைப் பயன்படுத்தி கிரடிட் கார்ட்களிலுள்ள இரகசிய தகவல்களை விசேடமாக வடிவமைக்கப்பட்ட Trojan, மற்றும் மல்வேர்கள் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தி திருட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இவ்வாறான புரோகிராம்களை கண்டுபிடிப்பதற்கு கணினியில் நிறுவப்பட்டுள்ள அன்டிவைரஸ் புரோகிராம்கள் அனேகமான நேரங்களில் கோட்டைவிடுகின்றன.

எனவே அவ்வாறில்லாது அதி உச்ச பாதுகாப்பைத் தரக்கூடியதும், நம்பிக்கை உடையதுமாக HitmanPro.Alert எனும் மென்பொருள் காணப்படுகின்றது.

இம்மென்பொருளானது Explorer, Chrome, Firefox, Opera, Safari, Maxthon, Pale Moon போன்ற உலாவிகளுக்கு இயைபாக்கமுடையதாகக் காணப்படுவதுடன் 99 சதவீதம் பாதுகாப்பானதாகக் காணப்படுகின்றது.

தரவிறக்கச் சுட்டி

Leave a Reply

Your email address will not be published.