முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நான்காம் நாளில் நாளை 15.05.2018 வல்வெட்டித்துறை சிவன் ஆலயத்தில் முன்பாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு ஆலடி தமிழிழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அண்ணன் அவர்களின் இல்லதின் முன்பாக இருந்து மாபெரும் நினைவுச் சுடர் தாங்கிய ஊர்திப் பவனியொன்று ஆரம்பிக்கிறது.இப் சுடர்ப் பவனியானது நாளை 10.30 மணிக்கு ஆரம்பித்து வல்வெட்டித்துறை சந்தியின் ஊடாக யாழ் நகரைச் சென்றடைந்து,தொடர்சியாக வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நினைவுச் சுடர் ஊர்தி பயணித்து இறுதி நாள் மே 18 முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடைகிறது. மாபெரும் நினைவுச் சுடர் தாங்கிய ஊர்திப் பவனிக்கு வலு சேர்த்து ஆரம்பித்து வைப்பதற்கு வல்வை மக்களையும் கழகங்களையும் அழைத்து நிக்கின்றோம். ஏற்பாட்டாளர்கள்
