வெள்ளை மாளிகைக்கு அருகில் தரித்து நின்ற வாகனத்தால் பரபரப்பு

வெள்ளை மாளிகைக்கு அருகில் தரித்து நின்ற வாகனத்தால் பரபரப்பு

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. எனவே, இங்க பலத்த காவலுக்கும், கெடுபிடிகளுக்கும் பஞ்சமிருக்காது.ஆனால், அதையும் மீறி இன்று அதிபரின் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தால் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டடிருந்த அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் இன்று மூடப்பட்டன. மக்பர்சன் சதுக்கத்தில் உள்ள சுரங்க ரெயில் நிலையத்திற்கு செல்லும் பாதையும் அடைக்கப்பட்டது. வாகனம் யாருடையது என்பது குறித்து அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையின் இருபுறமும் செல்லும் பேருந்துப் போக்குவரத்தும் பாதிக்கப்படைந்தது.

அங்க நின்ற வாகனத்தால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.