விழா வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த பொங்கல் விழா நாளை பக்தி பரவசத்துடன் நடைபெறவுள்ளது வல்வெட்டித்துறை மக்களும் அங்கு சென்று வழிபட்டு வருகின்றார்கள் நாளை வல்வெட்டித்துறையில் இருந்து பேருந்து கயஸ் மோட்டார் சைக்கிள், போன்றவற்றில் சென்று வழிபாட்டில் ஈடுபடவார்கள் குறிப்பிடத்தக்க விடயம் வட இலங்கை புகழ் வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மின் அமைப்பின் மின்னியல்களும் இடம்பெறுவது வழமையானது தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு இருந்த வேளையில் மிகவும் நேர்த்தியான கட்டமைப்பு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெறுவது வழமை தற்பொழுது அதே ஒழுங்குகள் இருப்பினும் கழவு அதிகரித்து காணப்படுகின்றது இதனை நிவர்த்தி செய்வதற்கு பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பு தேவைப்படும் என பக்தர்கள் கூறுகின்றார்கள். இங்கு காணப்படும் கட்டமைப்பு ஒழுங்குகளை எமது இந்திர விழாவின் போது பயன்படுத்தலாம்