ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் உலா வந்துள்ளார்.

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் உலா வந்துள்ளார்.
மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் நேற்று நடைபெற்று, இன்றைய தினம் பூங்காவன திருவிழா நடைபெற்றது. இதன்போது ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா நடைபெற்றது.

மேற்படி திருவிழாவின் வெளி வீதியில் அம்பாள் ஊர்வலம் வந்த போது தமிழீழ வரைபடத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வந்தார். மிகப்பெரிய தமிழீழ வரைபடத்துடன் அம்பாள் ஊர்வலம் வந்தமையால் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *