கணபதி படிப்பகத்தின் 51 ஆவது ஆண்டு விழாவும் பாலர்தின விழாவும்

கணபதி படிப்பகத்தின் 51 ஆவது ஆண்டு விழாவும் பாலர்தின விழாவும்

வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 51 ஆவது ஆண்டு விழாவும் பாலர்தின விழாவும் 06.08.2018 அன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வடக்கு விதியில் நடைபெவுள்ளது.

கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஓய்வு நிலை வைத்திய அதிகாரி Dr.இராமலிங்கம் இராமச்சந்திரன் (MBBS) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் நிகழ்வுகளின் வரிசையில் கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் கலை நிகழ்வுகள், பழைய மாணவர் நிகழ்வுகள் மற்றும் கணபதி மின் அமைப்பாளர்களின் மின் நடனம் என்பன நடைபெற காத்திருக்கின்றன.

நிகழ்வின் அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.