வங்காளதேச இஸ்லாமிய எதிர்கட்சிகள் நாடு தழுவிய நான்கு நாள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், வங்கதேசத்தில் நாட்டுக்கு துரோகம் மற்றும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் எழுதியதற்காக இஸ்லாமிய எதிர்கட்சிகளுக்கு ஆதரவான பத்திரிக்கை ஆசிரியர் ரகுமான் கைது செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து, ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கும், முஸ்லிம் அடிப்படைவாத கட்சியான ஜமாத் இ இஸ்லாமி ஆதரவாளர்களுக்கு இடையே நேற்று சிட்டாகாங்க் மாவட்டத்தில் மோதல் வெடித்தது. இதில் அவாமி லீக் கட்சியினர் 3 பேர் அடித்துக்கொல்லப்பட்டனர்.
குல்னா மாவட்டத்தில் போலீசார், கலவரக்காரர்களை நோக்கி சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். 20-ற்க்கும் மேற்பட்டோர் குண்டுகாயம் அடைந்தனர். 1971 போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நடந்து வரும் வன்முறைக்கு இதுவரை 101 பேர் இறந்துள்ளனர்.








