மகாவலியின் ஊடான, தமிழரின் நிலப்பறிப்பிற்கு எதிராக மக்கள் திரண்டனர்.28.08.2018 இன்று ஸ்ரீலங்கா அரசினால் மேற்கொண்டுவரும் தமிழ் மக்களின் இன அழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை “மகாவலி அபிவிருத்தி திட்டம்” என்ற பெயரில் தமிழர் தாயகப்பகுதியில் சிங்களக்குடியேற்றம். முஸ்லீம் குடியேற்றம் செய்கின்றது ஸ்ரீலங்கா அரசு. இதனை முற்றாக ஏற்றுக்கொள்ளாத தமிழ் மக்கள் தமது தாயக மண்னை எந்த இனவாதிகளும் சுபீகரிக்க விடமாட்டோம் என்று எதிர்ப்பு நடவடிக்கையாக முல்லைத்தீவில் இராயப்பர் ஆலயமுன்றலில் இருந்து முல்லைத்தீவு அரச அதிபர் அலுவலகம் வரை ஆர்ப்பாட்டம் செய்தனர். தமது தாயக நிலத்தை யாரும் சூரையாடவிடமாட்டோம் என்று மக்கள் கடும் சீற்றத்துடன் ஆவேஷமடைந்தார்கள். இதில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.மீள்குடியேற்றத்தின் பின்னர் இதுவே தமிழ்மக்களின் பாரியளவிலான எதிர்ப்புபோராட்டமாகும் என்பதும் குறிப்படத்தக்கது.