02:01 இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது பலாலி விண்மீன்
கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் நடாத்திவந்த மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான இறுதிப்போட்டியில் இன்று சனிக்கிழமை 08.09.2018 மாலை 5 மணிக்கு குப்பிளான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகத்தை எதிர்கொண்டது பலாலி விண்மீன் அட்டத்தின் ஆரம்பம் முதலே விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விண்மீன் போட்டி ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்தில் முன்கள வீரர் யூட் கெனடியினால் அதிரடியாக கோல் ஒன்று போடப்பட்ட ஆட்டம் மேலும் விறுவிறுப்பானது பின் மீண்டும் விண்மீன் வீரர் யூட் கெனடியினால் கோல்போடப்பட 02:00 என முதல்பாதியாட்டம் முடிவிற்கு வந்தது பின் இரண்டாம் பாதியாட்டத்தில் எதிரணி வீரர்களால் கோல் ஒன்றுபோடப்பட 02:01 என்ற கோல்கணக்கில் ஆட்டம் தொடர்ந்தது பின் குறிஞ்சிக்குமரன் வீரர்களால் கோல்போட எடுக்கப்பட்ட முயற்சி விண்மீன் பின்கள வீரர்களால் சிறப்பாக தடுக்கப்பட 02:01 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது பலாலி விண்மீன் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் ஆட்ட நாயகனாகவும் காண்டிபன் தெரிவுசெய்யப்பட்டு கிண்ணம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.