வல்வெட்டித்துறை சந்தியில் தியாக தீபம் லெப்கேணல் திலீபன் அண்ணா அவர்களின் 31 ஆண்டு நினைவு தினமும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது..
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சந்தியில் தியாகி தீலிபனுக்கு அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஐனநாயக போராளிகள், தமிழ்தேசிய கூட்டமைப்பு, வல்வை மக்கள், இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.
நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், வல்வெட்டிதுறை தவிசாளர் கோ.கருணாணந்தராசா,ஐனநாயக போராளிகளின் தலைவர் ந.வேந்தன், நகரசபை உறுப்பினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வைத் தொடர்ந்து குருதித்தானம் வழங்கப்பட்டது.