தியாக தீபம் திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழர் தேசமெங்கும் இன்று(26.09.2018) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
திலீபனது 31 வது நினைவு நாளை யாழ் பல்கலைக்கழகத்திலும், நல்லூரிலும், வல்வெட்டித்துறையிலும் அனுஷ்டிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவற்றில் நல்லூரில் இறுதிநாள் நிகழ்வு பெரும் திரளான மக்கள் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் தியாக தீப உணர்வாளர்கள் பறவைக்காவடி எடுத்துவந்து நல்லூர் தியாக தீப திலீபன் அவர்களின் தூபியில் இறக்கி வைத்து. அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து தியாக தீபம் உண்ணாணோண்பு இருந்த நல்லூர் கந்தன் ஆலய முன் வீீதியில் பன்னீருனாட்கள் தவமிருந்து பன்னீரெண்டாம் நாள் காலை 10.48 மணிக்கு வீரமரணமெய்தினார். அதேநேரத்தில் அவ்விடத்தில் இரண்டு நிமிட வீரவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் நினைைவாலயத்தில் மாவீரர்களின் பெற்றோரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து பொது மக்கள்,தமிழீழ விடுதலை புலிகளும்,மூத்த உறுப்பினர்களும் சிறுவர்கள், காட்சிகளின் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.