தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு கடைசி நேரத்தில் சிகிச்சை வழங்கிய மருத்துவர் மயிலேறும்பெருமாள் (வயது 73) காலமானார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் (ஓய்வுபெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி) இன்று (ஞாயிறு) காலை இயற்கை எய்தினார்.
மாரடைப்புக் காரணமாக அவர் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வைத்திய நிபுணரான இவர் இலங்கை இந்திய இராணுவ காலப்பகுதியில் வடமராட்சி பிரதேச மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய சேவையாளராவார்.
தமிழீழ தேசிய தலைவரின் நன்மதிப்பினை பெற்ற மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நேசித்து ஆத்மாக்களில் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை இலங்கை இராணுவ தடுப்பு முகாமில் மரணமடைந்திருந்த நிலையில் அநாதரவாகியிருந்த பார்வதியம்மாளை அழைத்து வந்தார்.
அத்தோடு தனது வைத்தியசாலையில் அவரது மரணம் வரை மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் பராமரித்து மருத்துவ சேவைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது