இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான லம்பார்கினி, தனது 50 ஆண்டு கால கார் தயாரிப்பு அனுபவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ‘அவென்ட்டடார்’ என்ற அதிநவீன காரை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. மணிக்கு சுமார் 350 கி. மீட்டர் வேகத்தில் பாய்ந்துச் செல்லக்கூடிய லம்பார்கினி அவென்ட்டடார் காரின் விலை 5 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். தனது செல்வ செழிப்பை சுற்றுலா பயணிகளுக்கு காட்டும் வகையில் பொலீஸ் ரோந்துப் பணிக்கு இந்த கார்களை பயன்படுத்த துபாய் அரசு தீர்மானித்துள்ளது.
குற்றம் செய்பவர்களை விரட்டிச்சென்று பிடிப்பதை விட, விமான நிலையம் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் இந்த கார்கள் குறுக்கும் நெடுக்குமாக ஒய்யார பவனி வரும் என கூறப்படுகிறது.