விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களை அனுப்பி ஆய்வு செய்வதுடன் சில சமயங்களில் தாமும் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர்.
இவ்வாறே செவ்வாய்க்கு தற்போது விண்வெளி ஓடங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவை செல்வதற்கு மாதக்கணக்கில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
எனவே இப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக தற்போது பூமியிலிருந்து வெறும் 30 நாட்கள் பயணத்தின் பின்னர் செவ்வாயை சென்றடையக் கூடிய அதிநவீன இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்பானது செவ்வாயில் ஆராய்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் விரிவுபட்ட ஆய்வினை மேற்கொள்ளவும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.