ஜெயக்காந்தன் கந்தசாமியினால் இரண்டு மாவீரர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக முப்பது முட்டையிடும் கோழிகள் வழங்கப்பட்டது.
கனடாவில் வசித்துவரும் ஜெயகாந்தன் கந்தசாமி அவர்களால் பொண்நகர் மத்தி,கிளிநொச்சியில் வசிக்கும் முன்னாள் போராளி புஸ்பராணி ஜேம்ஸ் மாற்று திறனாளி ஒரு காலை முழங்காலுடன் இழந்தவர் இவரின் கணவர் விடுதலை போரில் வீரகாவியமாகிய மாவீரர் (அருளாலன், புலனாய்வுத்துறை
வீரச்சாவு 26.01.2009)இவரின் ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வருகிறார்.
மற்றவர் பாரதிபுரம், கிளிநொச்சியை சேர்ந்த மாவீரர்
லெப் கேணல் வரதன்/சாமி
(சால்ஸ் அன்ரனிஸ் சிறப்பு படையணி
வீரச்சாவு 03.12.2007)
அவர்களின் மனைவி சிவலிங்கம் சுனிதா தற்போது இவர் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
இருவருக்கும் முப்பது முட்டை போடுடக்கூடிய கோழிகள் வழங்கப்பட்டது இந்த கோழிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தங்கள்தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று அவர் கூறியதை அடுத்தே இவ் உதவி வழங்கப்பட்டது.
இந்த உதவிகளை வழங்கிய ஜெயகாந்தன் கந்தசாமி கனடா டொரோன்டோ புளூஸ் விளையாட்டு கழகத்தின் நீண்ட கால அபிமானியும் ஆதரவாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உதவிகளை கனடா டொரோன்டோ புளூஸ் விளையாட்டு கழகத்தினால் தாயக அபிவிருத்திக்கு என்று ஆரம்பிக்கப்பட்ட புளூஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷனுக்கு ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட்டது.









