தாயகப் பிரதேசம் எங்கும் வெள்ளப்பெருக்கு உறவுகளின் துயரநிலை2018.12.22

தாயகப் பிரதேசம் எங்கும் வெள்ளப்பெருக்கு உறவுகளின் துயரநிலை2018.12.22

தாயகப் பிரதேசம் எங்கும் வெள்ளப்பெருக்கு
உறவுகளின் துயரநிலை2018.12.22

கடந்த 2018.12.21 ஆம் நாள் ஆரம்பித்த கடும்
மழையானது .தாயகத்தில் பல்லாயிரம் குடும்பங்களை இடம்பெயர் வைத்துள்ளதுடன் பெருமளவிலான சொத்துக்களை இழந்து . பாடசாலைகள் பொது நோக்கு மண்டபங்கள் பொது இடங்களில் இடைத்தங்கள் முகாம்களில் குடியிருந்து வருகின்றனர்.

யுத்தம் ,ஆழிப்பேரலை அனர்த்தம். என பல
வகையிலும் பாதிக்கப்பட்ட இவ்தாயக மக்கள் .ஓரளவு எழும்பிநடக்க. காலடி எடுத்து வைத்து தமது சொந்த முயற்ச்சிகளின். (பயனால்)மீண்டுமொரு பேரவலத்தை. சொத்தழிவுகளை சந்தித்துள்ளது.தாயக தேசம்.

இவ் பெரும் அனர்த்தமானது எமது பிரதேசத்தையும் விட்டுவைக்கவில்லை. A 35 பிரதானவீதி விசுவமடுவில் இருந்து புதுக்குடியிருப்பு
நோக்கிய வீதியில். மாணிக்கப்பிள்ளையார்
கோவிலடியுடன் வாகன போக்குவரவுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு படகுகளிலும் உழவு இயந்திரங்களிலும் பயணம் தொடர்கிறது.

அடுத்து உடையார்கட்டு மூங்கிலாறு , தேவிபுரம் மஞ்சள்பாலம் போன்றன இப்பொழுதும்
A 35 வீதியினைக் குறுக்கறுத்து. 4அடி நீர்
பாய்ந்த வண்ணமே உள்ளன. இவ் பிரதேசத்திற்கு உட்ப்பட்ட பிரதேசங்களில் பல. குடும்பங்கள் இடைத்தங்கல்முகாம்களில் உள்ளனர்.

அ. வள்ளிபுனம் ,தேவிபுரம் கிராமமக்கள்
வள்ளிபுனம் பொது நோக்கு மண்டபம்
ஆ. வெள்ளப்பள்ளம் , சுதந்திரபுரம் மக்கள்
சுதந்திரபுரம் பாடசாலை.
இ. இருட்டுமடு மக்கள்
இருட்டுமடு பாடசாலை.
ஈ. பாரதிபுரம் இளங்கோபுரம் மாணிக்கபுரம்
பாரதிபுரம் பாடசாலை.
உ. நெத்தலியாறு மக்கள்
நெத்தலியாறு பாடசாலை.
போன்ற இடைத்தங்கள். முகாம்களில் 1500
வரையான குடும்பங்கள் பதிவுகளை மேற்க்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் பிரதேசத்தில் அனர்த்தத்தின் பின்னர்.
உடனடியாகவே அனைத்து. பொது அமைப்புகள் ,அரச நிர்வாகத்தினர் , கிராம அலுவலர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள், மனிதநேய
செயற்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் நின்றுமக்களுக்காக சேவையினை மேற்க்கொண்டிருந்தனர்.

மேலும் குறிப்பாக

அ.வன்னிக்குறோஸ்அனர்த்த முகாமைபிரிவு
ஆ.தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு..
இ.நீலன் அறக்கட்டளை அமைப்பு.

இன்னும் முப்புர வட்டார பிரதேசசபை உறுப்பினர் திரு. ஏரம்பு இரத்தினவடிவேல். அவர்களின் சேவையும் அளப்பெரியவை.
டாக்டர் கௌரவ பா.உ சிவமோகன் அவர்கள் அதனுடன் இனணப்பாளர் திரு ரூபன் அவர்களின் செயற்ப்பாடுகளுடன்.உடனடியாக இடத்திற்கு வருகை தந்து பல பல. உதவிகளை
செய்தது மட்டுமல்ல. அவர்களது வாகனத்தையே எம்மிடம் தந்துதவி. பல உதவிகளை முன்னின்று செய்திருந்தனர்.

மேலும் அனைத்து செயற்ப்பாடுகளையும்
தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு மற்றும் வன்னிக்குறோஸ் அனர்த்தமுகாமைத்துவப்பிரிவு இன்னும் நீலன்அறக்கட்டளை அமைப்பு கிராம அலுவலர்கள் பொது அமைப்புக்களுடன் பிரதேசசபை உறுப்பினர்கள் ,பாராளு
மன்ற உறுப்பினர்களுடன் செயற்ப்பாட்டாளர்களுடன்.சிறப்பாக சேவையினை வழங்கி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவரச உடனடி உணவு உதவிகளை வழங்கியோர் விபரம்…
2018.12.22
அதிகாலை உடனடியாகவே தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு காலை
உணவுதேனீர் மற்றும் அவசர இதர செலவுகள்
அத்தியாவசியசெலவுகளை தமது கூடுதல்
நிதிப்பங்களிப்புடன் செய்திருந்தனர். மேலும்
இடைத்தங்கல் முகாம்களுக்கு வர முடியாத
வயோதிபர்கள் இயலாதவர்களுக்கு அவர்களின் இடங்களுக்கு நாடிச்சென்று பல உதவிகளையும் செய்திருந்தனர்.

உணவு பற்றாக்குறை நிலவுகின்ற போது அவ் இடங்களுக்கான மேலதிக உணவுகளையும் இவ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பே வழங்கி வருகின்றது.
மேலும்
அ.காலைஉணவு.பாண்,வாழைப்பழம்,தேர்
ஆ…இடங்கள்.வள்ளிபுனம்,தேவிபுரம்,வெள்ளப்பள்ளம்
இ…நிதி உதவி.. வன்னிக்குறோஸ் அமைப்பு
2018.12.22
அ…மதிய உணவு…சோறு
ஆ…இடங்கள்…………வள்ளிபுனம்,தேவிபுரம்.
இ.நிதிஉதவி.. நீலன் அறக்கட்டளைஅமைப்பு
2018.12.22
அ…மதிய உணவு…சோறு
ஆ…இடங்கள்………..இருட்டுமடு
இ…நிதிப்பங்களிப்பு..
2018.12.22
அ….இரவு உணவு…..பாண்,பருப்புகறி
ஆ. ..இடங்கள்….தேவிபும்,வள்ளிபுனம்.
இருட்டுமடு ,சுதந்திரபுரம் (கறி இல்லை)
இ… நிதிப்பங்களிப்பு..
முப்புர வட்டார பிரதேசசபை உறுப்பினர்
திரு ஏரம்பு இரத்தினவடிவேல்
குறிப்பு….
அனைத்து சமைத்த உணவுகளையும் தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு மற்றும் வன்னிக்குறோஸ் மகளீர்பேரவையினர்
சமைத்து வழங்கினர் என்பது. குறிப்பிடத்தக்கது.
விசேடமாக தாமரை. மாற்றுத்திறனாளிகள்
அமைப்பின் தலைவர் ரூபன் அண்ணன் அவர்களின் சேவை அளப்பரியவை .

தொடரும்..

நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published.